Thursday, April 30, 2009

இலங்கையில் தமிழன் ...

அடியே காளி...
வன்னி வனம் அலைந்து திரியும் நீலி
சூலம் அதிரும் நியாய சூலி
எங்கே போனாயடி
எங்கள் இதய நரம்பின் வலியெல்லாம்
வன்மையாய் பிழிந்து எங்கே தொலைந்தாயடி...

இந்த காலங்களில் …
நிரந்திரமாய் நீ எங்களில் அறறுபோனாயோ
இல்லை ....
எம் தமிழன் தன் தாலியறுக்க – பிணங்கள் தேடி சுடுகாடு போனாயோ ...

இங்கே நிலம் முழுக்க பேய்கள் நின்று ஆடுதடி
பிணங்கள் குவிந்து போராய் திமிருதடி
அவைகளின் கண்களில் மிருக வெறி தீக்கங்காய் உமிழ்ந்து
பச்சை குழந்தையின் உயிர் கூட என்னிடம் மிச்சமில்லையடி

எரிகின்ற வயல் வழியே
இராகோடாங்கி குறி சொல்லி சென்றானடி
நின் பிண உடலை ஈன வெறி நாய்கள் புசித்து போகும் வக்கிரம் நிகழும் என்று ....
சத்தமாய் குறி மொழிந்தானடி

அதிர்ந்து உன்னை தேடி அலைகிறேனடி …
நீயோ அக்கோடாங்கியின் வரவிற்காய் விடியும் வரை காத்திருந்து
அவன் உறவு கொல்ல்கிறேயடி ....

வெப்ப மர உச்சியில் வெயில் கொண்டு ஆடும் நீ
ஊழி போர் மூச்சில் இன்று நிசப்தமாய் போனதேனடி

……… இன்னும் முற்றுபெறவில்லை …
தமிழனுக்கு …..
….வலிகள் தொடர்ந்து
கொண்டுதானிருகின்றன ……

Thursday, April 2, 2009

Heal the world.... making It a Better Place 4 You and 4 Me....

http://www.youtube.com/watch?v=1O2WwESwJhw
வெற்றிக்குப் பிறகுதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;தோல்விக்குப் பிறகுதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!